என் தலைமகனுக்கு ஒரு வாழ்த்து

ஐந்தாம் அகவையில் அடியெடுத்து வைக்கும் .....
என் அன்பு தலைமகனே .....
என் ஆசை தமிழ்மகனே .....
நீ பிறந்த இந்நாளில் உன்னை வாழ்த்தும்
உறவுகளின் உள்ளங்களோடு
நானும் வாழ்த்த வரைகின்றேன்
வாழ்த்து மடல் உனக்கு இன்று ......
அன்பிற்கினிய செல்வ மகனே ......
இந்த நாள் மிக இனிய நாள் - ஆம்
"அற்பனாய்" இருந்த என்னை "அப்பனாய்" நீ மாற்றியதால்
இந்த நாள் மிக இனிய நாள் என் வாழ்வில் .......
கம்பனும், கவியரசனும் வடித்திடாத கவிதை நீயடா .....
மோனலிசாவும் தோற்று போகும் உயிரோவியம் நீயடா ...
உலகின் எட்டாம் அதிசயம் நீயடா.....
இசையில் எவருக்கும் எட்டாத சுரமும் நீயடா ....
பிரம்மன் படைத்த தலைமகன் நீயடா ....
எனக்கு ஈசன் தந்த வரமும் நீயடா....
தர்மம் காத்திடும் தனையனும் நீயடா ...
வாழ்வை வளமாக்கும் புனிதனும் நீயடா ...
வாழ்க்கையை புரியவைத்த அறிஞனும் நீயடா
கவிதைக்கு கருவாய் இருப்பவனும் நீயடா ....
தமிழுக்கு அழகை தந்தவனும் நீயடா ...
புன்னகை தருகின்ற கண்ணனும் நீயடா ...
ஏக்கங்களை எப்போதும் கொடுப்பவனும் நீயடா ....
நான் பிறந்த காரணத்தை உணர்த்தியவனும் நீயடா.....
நாளைய உலகாள பிறந்தவன் நீயடா ....
உன்னை மகனாய் பெற்ற கர்வத்தமிழன் நானடா ...
நீ பிறந்த இந்நாளில்
இறையருளால் .....
எல்லா வளமும் நலமும் பெற்று
நாடே போற்றும் நல்மகனாய் ...
நீ வாழியவே பல்லாண்டு பல்லாண்டு
பல கோடி நூற்றாண்டு ....
என எல்லாம் வல்ல இறைவனை வேண்டி
வாழ்த்துகின்றேன் ....
நீ பிறந்த இந்நாளில் உன் தேன் சிந்தும் கன்னத்தை
தொட்டு பார்க்க ஏங்குகின்றேன் ....
என் இதழ் கொண்டு ...........
தொட்டு பார்க்க ஏங்குகின்றேன் .....
உன் பூமுகம் பார்த்து .... புன்னகை
அதை கேட்கும் ....... வரமொன்றும் தந்து விடு என் இறைவா
என அயல்நாட்டில் நான் இருந்து ஆண்டவனை வேண்டுகின்றேன் ....
என்றும் அன்புடன் .........
உன் அன்பு அப்பா ......