சிரித்து பார்ப்போமே

பேஷண்ட்: ""இருட்டில் எதைக் கண்டாலும் பயமாக
இருக்கிறது டாக்டர்''

டாக்டர்: ""என்ன இது முட்டாள் தனமா பயப்படறீங்க?
இருட்டில்தான் எதுவுமே தெரியாதே அப்புறம் எதைக்
கண்டு பயப்படறீங்க''!
-
என்.சி.தர்மலிங்கம், நாமக்கல்.
-
--------------------------------------
-
"சாமி நான்தான் ஆன்மீகத்துக்கு "ராஜா'னு டிவியில
பேட்டி கொடுத்தீங்களா ?''
-
"ஆமாம்''

"போருக்குத் தயாரா'னு வடநாட்டு சாமியார் ஒருத்தர்
ஓலை அனுப்பியிருக்கிறார் சாமி''!
-
எம்.ஏ. நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி.
-
--------------------------------------
-
"கபாலியின் பையன் சிறந்த புட்பால் வீரர்ஆக
வருவான் என்று எப்படிச் சொல்ற?''
-
"பள்ளிக் கூடத்தில் அவன் வகுப்பு தோழர்களையெல்லாம்
கடிக்கின்றானாம்''!
-
அ.குணசேகரன், புவனகிரி.
-
-----------------------------------
-
கஸ்டமர்: ""என்னப்பா வடையில ஓடு இருக்கு?''
-
சர்வர்: "இது ஆமைவடை சார். ஓடு இருக்கத்தான்
செய்யும்''
-
எஸ்.ஆறுமுகம், தேனி.
-
-------------------------------------
-
"சர்வர், காபியிலே ஈ ஆடிகிட்டு இருக்கு''

"பின்னே, நீ கொடுக்கிற ஏழுரூபா காசுக்கு சமந்தா,
தமன்னாவா டான்ஸ் ஆடுவாங்க?''
-
--------------------------------------
-
"எனக்கு சர்க்கரை இல்லேன்னு சொல்லிட்டாங்க''
-
"நல்லதுதானே''
-
"வயிற்றெரிச்சலை கிளப்பாதீங்க, சர்க்கரை இல்லேன்னு
சொன்னது ரேசன் கடையிலே''!
-
ஆர். சி.முத்துக்கண்ணு, திருச்சி.
-
---------------------------------
-
மனைவி: ""ஏங்க நம்ம வீட்டில் திருடன் நுழைந்து
விட்டான், எழுந்திருங்க!''
-
போலீஸ்காரக் கணவர்: ""நான் இப்போது டூட்டியிலே
இல்லேடி''
-
மனைவி: ?!?!?!
-
அ.ப.ஜெயபால், கொள்ளிடம்.
-
--------------------------------------
-
"டாக்டர் எனக்கு மூலம்''
-
"பேஷ்... பேஷ்... நானும் அதே ராசிதான் ஆனால்
பூராடம் நட்சத்திரம்''
-
கி.சிநேகா, திருச்சி.
-
---------------------------------------
நன்றி: தினமணி கதிர்
--தினமணி

எழுதியவர் : முகநூல் (24-Aug-14, 11:18 am)
பார்வை : 172

சிறந்த நகைச்சுவைகள்

மேலே