இயல்பில் புதுமை

என்னாசைக்காக உனையிழகும் பெண்ணே !
உன்னாசை எதுவோ சொல்லடி உனக்கென்ன
என்மீசைக் குத்தும் வலியரிந்தும்கூட
எனக்காக முத்தம் எர்க்குமெந்தன் அன்பே !
தொள்சாய்ந்துப் பேசி தோளணைக்கும் பொழுதில்
நான்தோர்க்கும் இடமோ உன்தொள்தான் அன்பே !
ஆடையது உன்னைத் தழுவுவதைவிடவும்
உன்னிடையை நானோ தழுவுகிறேன் பெண்ணே !
கனவனென்ற முறையில் இதுவரையும் உனக்கு
பெரிதாக ஒன்றும் கொடுத்ததில்லை அன்பே !
கனவனவன் என்றும் கொடுக்காத வரமாய்
காலமெல்லாம் காதலனாய் உன் வளம்வருவேன் உயிரே.... !

எழுதியவர் : செ.காமேஷ் வரன் (24-Aug-14, 11:58 am)
சேர்த்தது : monishammu
Tanglish : iyalbil puthumai
பார்வை : 52

மேலே