வாழ்க தமிழ்

துப்பிடத் துலங்கும் உண்மை
துவைத்திடத் தெரியும் வெண்மை
உப்பது கொண்ட வன்மை
உரு மறைந்திடக் கூறும் இன்மை
தப்பிதம் அறியாக் கேண்மை
தன்னிலை உணர்ந்தால் நன்மை
செப்பிடும் மொழியின் திண்மை
சிரமதில் கொண்டால் மேன்மை

எழுதியவர் : சிவநாதன் (24-Aug-14, 7:38 pm)
பார்வை : 59

மேலே