பறவை
எனது விதியை நிர்ணயிக்க,
எத்தனை ஆவல் உனக்கு,
உன்னையே உலகென்றதால்,
உருட்டுகிராயே சகட்டுமேனிக்கு,
அன்பிற்கு பணிதல் ஒன்றும்,
அடிமைத்தனத்திற்கு அடிப்படையல்ல,
கட்டுப்பட்டு நடத்தல் என்றும்,
கட்டுப்பெட்டித்தனம் அல்ல,
என் தவறுகளுக்கு உயிரை எடு,
தாராளமாய் ஏற்கும் தளராமனது,
அதுவிடுத்து அதை பாவமாக்கி,
கிடத்தாதே எனை சிலுவையின் நுனியில்,
எடுத்துவந்தது தனித்தனிப் பிறவி,
எதற்க்குப்பின் உனக்கு உரிமையாய்?
அன்பு கட்டுப்படுத்தி கட்டியழும்,
எட்டவைத்து மொட்டை அடிக்காது,
உன் சுதந்திரத்தின் குறுக்கே நானில்லை,
என் சிறகுகளில்மட்டும் ஏன் உன் ரேகைகள்?
எல்லாம் தெரிந்து பறந்துதிரியவே ஜென்மம் !
பறவையின் விரைவுகளை பறிப்பதெல்லாம் வன்மம் !!