முரணின் தேடலில் -3
முரணின் தேடலில் -3 (இயற்கை)
============================
அகழ்ந்து பெருத்தவரையும்
நலிந்து கிடப்பவரையும்
ஆளாமல், தாங்கும் நிலம்.....
============================
பள்ளங்கண்டு இகழாமல்
மே(ட்)லிருந்து துள்ளியோடி
உலகமைக்கும் நீர்...
============================
அதிக அழுத்தத்திலிருந்து
குறைந்த அழுத்தத்திற்கு
உயிராக வீசும் காற்று....
============================
கீழ்தாழ்ந்து உரசினாலும்
மேலெழுந்து எரியும்
துணை சமைக்கும் தீ.......
=============================
காணும் எல்லைவரை
காண வழியில்லா
வாழ்நாளாய் விரியும் ஆகாயம்...
==============================
இயற்கையின் துளியாய் நீ...
இயங்கிக் கலந்து,கடந்து செல்.
உன்னை நீயே உணர்ந்து செல்...
==============================