விதவைக் காதல்
என்இதயத்தில்
சிலை வடித்தேன்
உன் உருவத்தை
அது சிதைந்து
விடாமல் பாது
காட்கவே
என் எண்ணத்தில்
நீந்த விட்டேன்
உன் பெயரை
என் உயிரோடு
உறவாடவே.
உன் நினைவில்
நான் இல்லை
என் நினைவில்
நீ தான் அன்பே.
தவறி விழுந்த
விதை இடம்
தெரியாமல்
முளையிடுவது
போல் நீ என்
உள்ளத்தில்
கொடியானாய்.
பட்ட மரத்தில்
அமர்ந்த பறவை
போல் .
மரம் ஏங்குது
பறவை தயங்குது
விருச்சம் இல்லா
மரத்தை வெறுத்து
ஒதுங்குது
நிழல் கொடுக்காத
மரமும் சுகம்
கொடுக்காத உடலும்
ஒன்று என புலவர்
புகட்டுகின்றார்
பாடம் தெருவில்
நின்றபடியே.