அன்பினை நினைந்து
உணர்வில் கலந்து
உறவாக வந்த உன்னால்
என்விழிகளின் நீரை
தடுக்க இயலவில்லையே
என மனம் வருந்தாதே
அது ஆண்டவன் கருணை
உன் வழியே கண்டதால்
வரும் ஆனந்தக் கண்ணீர்
கடல்நீர் வற்றினாலும்
என் கண்ணீர் வற்றாது
காலம் முழுதும் உன்
அன்பினை நினைந்து...