அழகான வாழ்க்கை ஆனந்தமாய்
![](https://eluthu.com/images/loading.gif)
நித்தம் தினம் இருண்டாலும் ..
இருளே எதிர்பாராமல் மீளும்...
வெறி கொண்ட விடியல் ...!
நேற்றைய ஏளனங்களை ..
ஏரிடாமல் ஏறுமுகமாய் ...
எழில் எழுச்சி நடைகள்..!
தடைகள் இல்லா தடங்களா..
பாதப்பெருவிரல் நகத்திற்கே தகரும்...
நம் நடைக்கு இவையொரு தடங்கலா....!?
நொடித்துளிகளில் அனைத்திலும்...
சாதனை துளிகள் துளிர்த்திடும்...
துளிகளனைத்தையும்
வலியில்லாமல் வடித்திடலாம் சிலைக்கு..
சாதனைக்கான வியர்வை துளிக்கான வலி நமக்கு...
வேறு வழியில்லாமல் ....!!!
அழையா விருந்தாளி தோல்வியே..
நம்மிடம் என்றால்...
அட்சதையுடன் உயிர்ச்சதையும் ..
திணவெடுத்து ஏங்கும் வெற்றியும் ...
நம்முடன் முயன்றால் ...!!!
மனித வாழ்க்கைக்கு...
நொந்து கொள்ளவா..??
அனுபவிக்கும் ஆர்வத்தில்
அது கிடைத்தற்கு
நோன்பு கொள்ளவே நாழியில்லை ...
உன்னத உணர்வுகள் ...
தாய்மையும் மழலையும்...
காதலும் முத்தமும் ..
சிநேகிதமும் தியாகமும் ...
கண் கலங்கிய புன்னகையும் ..
களிப்புடன் குதுகளிக்கும் ...
அபூர்வங்கள் ஆர்பரிப்புகள் ...
இமயமலையளவு கற்புரமேற்றி..
உள்ளங்கையில் அடி(ணை)த்து
சொல்வேன் ....!!!
கடவுளின் மனங்கனிந்த
பரிசான
அழகான வாழ்க்கை...
ஆனந்தமாய் மட்டுமே ........