என் காதல் இன்னும் வாழுது - இராஜ்குமார்
![](https://eluthu.com/images/loading.gif)
நிறமும் பணமும் நிலையென்றால்
மனமும் அலையா சிலையாகும்
ரசிப்பும் உயிர்ப்பும் கவியென்றால்
கற்பனை கலையா கனவாகும்
உணர்வும் உயிரும் நீயென்றால்
காதல் உனக்கு சிரிப்பாகும்
வெறுத்து மறுத்து நீ போக
நடைய மறந்து நான் வேக
சுவரும் கண்ணீர் சுரக்குது
இலையும் வெந்நீர் தெளிக்குது
நகமும் நகர நினைக்குது
நாசியும் நுகர மறுக்குது
வழியும் கரட்டா மாறுது
விழிக்கு இருட்டே தெரியுது
நடந்து போன நால்வரின்
நிழல கூட நான் பாக்கல
"ஒத்த பொண்ண நினைச்சு
நாலு வருசமா நிக்குது
இந்த அண்ணன் பாவம்னு "
கடந்து போன ஒரு பொண்ணு
காதில் விழுக சொல்லுது
அவ்வார்த்த ஒன்ன நான் கேக்க
என் காதல் இன்னும் வாழுது
- இராஜ்குமார்