நல்ல பெண்மணி தீனோர் விரும்பும் கண்மணி
![](https://eluthu.com/images/loading.gif)
ஓதுவதிலும் படிப்பதிலும்
உயர்ந்து விளங்குவாள்..
கற்றபடி கேட்டபடி
நடந்து வாழுவாள்..
தலை குனிந்து தரை
பார்த்து நடந்து செல்லுவாள்..
தன் குரல் தாழ்த்தி
பணிவுடனே உண்மை பேசுவாள்..
பர்தா இன்றி வீடு விட்டு
சென்றிட மாட்டாள்..
புருஷன் முன்பு முக்காடின்றி
நின்றிட மாட்டாள்..
பிறந்த வீட்டு பெருமைகளை
புகுந்த வீட்டில் பேசிட மாட்டாள்..
கணவன் பேச்சை மீறி
நாளும் நடந்திட மாட்டாள்..
மாமனார் மாமியாரை
ஏசிட மாட்டாள்..
கணவன் வழிவந்த சுற்றத்தாரை
இகழ்ந்திட மாட்டாள்..
வீட்டு வேலை முடித்திடமால்
படுத்திட மாட்டாள்..
பெரியோர் விரும்பாத செயல்
எதையும் செய்திட மாட்டாள்..
எவரும் காண குலுக்கி மினுக்கி
அலைந்திட மாட்டாள்..
எளியவரை கண்டுவிட்டால்
மனம் நோக பேசவும் மாட்டாள்..
கணவனின் வருமானத்தை
கருதி வாழுவாள்.
.
எதையும் கண்டபடி சீரழித்து
கெடுத்திட மாட்டாள்..
குமுதம் குங்குமம் என்றும்
படித்திட மாட்டாள்..
ஆசை தூண்டும் சினிமாவை
பார்த்திட மாட்டாள்..
இவள் ரோஜாவின் இதழ்களை
போல் மென்மையானவள்.
.
மார்க்க ராஜாவின் (நபி ஸல்)
வாழ்வுதனிலே வாழ்ந்து செல்பவள்..