எல்லாம் வேண்டுமடி உன்னோடு மட்டுமே 555

உயிரானவளே...

என் சினுங்கள்களையும்
கொஞ்சல்களையும்...

முத்தங்களையும் எப்போதும்
உன்னால் ஏற்றுகொள்ள முடிகிறது...

என் திட்டுகளையும்
கோபங்களையும்...

உன்னால் ஏற்றுகொள்ள முடியாமல்
போகும் போதெல்லாம்...

நமகிடையில் வந்துவிடுகிறது
ஓர் மௌனம்...

உன்னை கொஞ்ச உரிமை கொண்ட
என் உதடுகளுக்கு...

உன் மீது கோபம்
கொள்ளவும்...

உரிமை உண்டென நினைத்து
கொண்டு இருக்கிறேனடி...

எவர்மீதோ உள்ள
கோபம்...

உன் மீது கோபம் கொண்டு ஆறுதல்
கிடைக்குமென ஏங்குகிறேனடி...

உன்னோடு கோபம்
கொண்டதால்...

நீ வருந்தும் நேரங்களில்...

உன்னோடு கொஞ்ச
இருக்கும் உரிமை...

கோபபட இல்லையோ என்று
நினைக்கும் நேரங்களில்...

மௌனம் என்னோடு
உறவாடுதடி கண்ணே...

சோகம் சந்தோசம்
இன்பம் துன்பம்
கோபம் கொஞ்சல்...

எல்லாம் வேண்டுமடி
உன்னோடு மட்டுமே...

என் வாழ்நாள்
முழுவதும்...

என் பிரியமானவளே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (27-Aug-14, 5:00 pm)
பார்வை : 778

மேலே