தேய்மானம்
![](https://eluthu.com/images/loading.gif)
ஆண்டொன்று
கடந்தால்
உடலில்
தேய்மானம் ====
குடும்பம் என்று
ஒன்று இருந்தால்
உறவுகளில்
தேய்மானம் ======
வாழ்க்கை என்று
ஒன்று இருந்தால்
இன்னல்களின்
வலிகளால் தேய்மானம் =====
தேய்மானம்
பிறப்பிலிருந்து
இறப்பு வரை
ஒரு நிகழ்வு தான்
தேய்மானம்
தொய்வை தந்தாலும்
வளர்ச்சியை நோக்கி
வலிமையோடு
நடை போடும் போது
மனிதன்
எனும்
சொத்திற்கு
தேய்மானம்
என்றென்றும் இல்லை =====