கூட்டல் கழித்தல் பெருக்கல் - சர்நா -மாணவர்க்காக-
![](https://eluthu.com/images/loading.gif)
சத்துணவை கூட்டிக்கொள்
துரித உணவை கழித்துநில்
ஆரோக்கியம் பெருக்கிச்செல்
விளையாட்டை கூட்டிக்கொள்
சோம்பலை கழித்துநில்
சுறுசுறுப்பை பெருக்கிச்செல்
அன்பதனை கூட்டிக்கொள்
வம்பதனை கழித்துநில்
இன்பத்தினை பெருக்கிச்செல்
நல்லதை கூட்டிக்கொள்
தீயதை கழித்துநில்
நன்மையை பெருக்கிச்செல்
கரிசனம் கூட்டிக்கொள்
கர்வத்தை கழித்துநில்
நிதர்சனம் பெருக்கிச்செல்
கனவை கூட்டிக்கொள்
களிப்பை கழித்துநில்
கர்மத்தை பெருக்கிச்செல்
முயற்சியை கூட்டிக்கொள்
தோல்வியை கழித்துநில்
வெற்றியை பெருக்கிச்செல்
நம்பிக்கையை கூட்டிக்கொள்
வெறுமையை கழித்துநில்
வாழ்க்கையை பெருக்கிச்செல்