என் உயிர் நண்பன்

எனக்கொரு நண்பன் கிடைத்து
விட்டான்
என் மனதினுள் நட்பை விதைத்து
விட்டான்
அழுகை , துக்கம் மறக்க
விட்டான்
சிரிப்பை என்னுள் புகுத்தி
விட்டான்

நான் காதல் இன்றி சாதல்
என்றேன் - அவன்
நட்பு இன்றி சாதல் என்றான்
நான் இன்பமில்லா வாழ்வு
ஏன் என்றேன் - அவன்
துன்பத்திலும் வாழ்வு என்றான்
நான் வாழ்க்கையே வெறுப்பு
என்றேன் - - அவன்
நம்பிக்கைதான் வாழ்க்கை
என்றான்

ஏன் ஒவ்வொரு பின்னடைவிலும்
ஏன் நண்பன் என்னை முன்னேற்ற
துன்பத்திலும் இன்பத்திலும்
ஏன் நண்பன் துணையிருக்க
வெறுத்துப் போன ஏன் வாழ்வு
படிப்படியாய் ஒளி பெற
ஏன் நட்பும் ஆழமாய் ஆணிவேர்
விட்டது
ஏன் உயிர் நண்பனே !
உனக்கு கோடி நன்றிகள்

எழுதியவர் : fasrina (28-Aug-14, 9:38 am)
Tanglish : en uyir nanban
பார்வை : 850

மேலே