பெத்த மனம் பித்து ,பிள்ளை மனம் கல்லு
பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்தவள் அம்மா !
இவர் தான் உன் தந்தை என்று அறிமுகப்படுத்தியவலும் அம்மா !
உனக்கு கல்வி போதித்தவலும் அம்மா !
உன் வாழ்க்கைக்கு தேவையானதை தருபவளும் அம்மா !
நல்லது ,கெட்டது சொல்லித் தருபவளும் அம்மா !
உன்னை விட்டுக் கொடுக்காதவலும் அம்மா !
துக்கம் வரும் வேலையில் அணைப்பவலும் அம்மா !
நோயுண்டு இருந்தால் பாதுகாப்பவலும் அம்மா !
இப்படிப்பட்ட அம்மாவை இன்றைய இளைஞர்கள் சும்மா
என்கிறார்களே ஏன் ?
வயது முதிர்ந்த காலத்தில் முதியோர் இல்லத்தில்
தள்ளி விடுகிறார்களே நியாயமா ?
உங்களை அனாதையாக விடாமல் காத்த அவர்களை
அனாதையாக விடுவது நியாயமா ?
உங்களுக்கு ஒரு துணை கிடைத்ததும் ,அவர்களுக்கு துணையாக
இல்லாமல் இருப்பது நியாயமா ?