என் அம்மா - ராதாதிருஞானமூர்த்தி

தம்பிக்கும் தங்கைக்குமான
அன்புச்சண்டையில்..
முதலில் நான்தான் என்று
அலைபேசியின் பெருத்த சத்தத்தில்..
வந்து விழுந்தது..
எனக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்...!

பிறகு..

என் தாய்க்கே உரிய ராகத்தில்..
``ஏன்டா எப்படா வீட்டுக்கு வர..
நீ இல்லாம வீடே வெரிச்சோடி இருக்குடா``

என்று குரல் ததும்ப அவள் வார்த்தைகளை
கேட்டதும்...

என் தனிமையிலும்
அவள் அன்பு...
என்னை தழுவியதை எண்ணி..!
ஆனந்தமாய்..
கண்களின் நீரில்..
நனைகிறது மனம்...!

எழுதியவர் : சதுர்த்தி (30-Aug-14, 2:45 am)
பார்வை : 154

மேலே