அம்மா

அனைவரும் முதலில் கருவாவதும்
அம்மாவிடம் தான்
அனைவரும் முதலில் உச்சரித்த வார்த்தையும்
அம்மா தான்
அனைவரும் காலையில் கண் விழித்தவுடன் காண்பதும் அம்மாவைத் தான்
அனைவரும் இரவில் உறங்கும் முன் காண்பதும்
அம்மாவைத் தான்
அனைவரும் (மிருகங்களும்) பசித்தால் அழைப்பதும்
அம்மா என்று தான்
அனைவருக்கும் முதல் தோழி
அம்மா தான்
அனைவரும் நேசிக்கும் முதல் உயிர்
அம்மா தான்
நம் மீது அன்பு பாசம் நேசம் அனைத்தையும் உண்மையாக வெளிடுத்துபவளும்
அம்மா தான்
நாம் எப்பொழுது வீடு வருவோம் என்று காத்திருப்பவளும்
அம்மா தான்
நாம் இரவில் உறங்காமல் படிக்கும் பொழுது அவளும் உறங்காமல் நமக்காக தேனீர் வைத்து கொடுப்பதும்
அம்மா தான்
தினமும் நமக்காக நெருப்பில் வெந்து சமைப்பதும்
அம்மா தான்
நம்மை பத்து மாதம் சுமந்து பெற்றவளும்
அம்மா தான்
நமக்காக மறு ஜென்மம் எடுப்பவளும்
அம்மா தான்
மொத்ததில் நமக்காகவே உயிர் வாழும் ஒரே உயிர் அம்மா தான் அம்மா மட்டும் தான் ....

அம்மா இல்லை என்றால் நாம் இல்லை...

எழுதியவர் : கனி (29-Aug-14, 6:30 pm)
Tanglish : amma
பார்வை : 230

மேலே