கொஞ்சும் காதல்
![](https://eluthu.com/images/loading.gif)
யாரோ இருவர்
பெற்றோரை எதிர்த்து
காதல் திருமணம்
புரிந்து கொண்டால் அதைச்
சொல்லியே தலைவலிக்கச்
செய்யும் பாட்டி ......
அலைபேசியில் குறுஞ்செய்தி
கண்டு சிரித்திட்டால்
என்னவென்று வினவும்
விவரமான அம்மா....
எதிரே வரும் கண்
ஒரு கணம் உற்றுநோக்கினால்
யாரவன் என்ற கேள்விகேட்டே
துளைத்தெடுக்கும் அருமை சகோதரி...
வீட்டில் சிரித்தால்
அழகென்று கொஞ்சும்
தமையனுக்கு வெளியிடங்களில்
மௌனம்தான் பிடிக்கிறது....
பெற்ற மகளைப்பற்றி அறிந்தும்
குடும்பத்தின் பெருமைகளை
நினைவூட்டும் பாசக்காரத் தந்தை ....
எல்லாம் தெரிந்தும்
அனைத்தும் புரிந்தாலும்
காதலிக்கிறேன்,இன்னும்
கொஞ்சம் அதிகமாகவே !
விளையாட்டாக அல்ல!!
நிஜமாகவே!
எங்கள் குடும்பத்தை !!