என் மாலை பொழுதினில் ஒரு நாள்

ஆறு மணி ஆக வேண்டி
கடிகாரத்தை கேட்டு,அமைதியாய்
இருந்த என் வாகனத்தை அலறவிட்டு,
மெதுவாய் அதை தேற்றி
சற்று வேகம் கூட்டி நெடுஞ்சாலை நுழைந்துவிட்டேன்....

தள்ளி விட முயற்சிக்கிறது எதிர் காற்று,
யாரையோ குறி வைத்து
என்னை வந்து
மோதுகிறது பூச்சிகள்,
என்னை இடிக்கும் அளவு பக்கம்
வந்து நினைவுக்கு வரும்
மாநகர ஓட்டுனர்கள்...
சரியாக தெரியாமல் போன ஜன்னல்
ஓர அழகிய முகங்கள்..
எனக்கு மட்டும் கேட்கும் என்
நேற்றைய பாடல்கள்...
என் வண்டியை
போய் முந்திவிட்டு சிரிக்கும் மற்ற சக்கரங்கள்..

இத்தனையும் தாண்டி பயணத்தின்
வேகம் கூட்டுகையில் கொடுத்த
முடுக்கமும் குறைந்து ஓரங்கட்டியது
என் இரு சக்கரம்,
எரிபொருள் வேண்டுமென கேட்டு...

இருபதாம் நூற்றாண்டின்
துவக்கத்தில் வந்தவன்,
ஊரையே ஒரு உறுமல் சத்தத்தில் எழுப்புபவன்,
எனக்கு நிகரான கோபம் கொண்டவன்,
வீம்புக்கென்றே பலமுறை
நடக்க வைத்தவன்,
விடை தெரியாத பிரச்சனைகள்
பல உள்ளே கொண்டவன்...

பக்குவமாய் அவனை தள்ளி கொண்டு,
இப்பொழுது இவை அனைத்தையும்
மீண்டும் கடக்கிறேன்



என் நடை வண்டியில்.....

எழுதியவர் : சுகன் dhana (30-Aug-14, 12:00 am)
பார்வை : 308

மேலே