சிந்தித்த சில விநாடி
ரயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்தேன்
ரயிலின் அசைவுகள் என்னை உரச
எதையோ எண்ணியபடி நானும் ஜன்னலின் கம்பிகளில் சற்றே தலை சாய்த்தேன்
எண்ணத்தில் கசிந்த நினைவுகள் சில வினாடிகளின் என் விழிகளிலும் கசிய
எவரும் அறியா வண்ணம் மெதுவாய் துடைத்துக்கொண்டேன்
என் மனம் தடத்தோடு தடுமாறிக்கொண்டே இருக்க
திடுக்கிட்டு சுயநினைவுக்கு வந்தபோது ரயில் நின்றுக்கொண்டிருந்தது
என் கவனத்தை வேறுப்பக்கம் திருப்ப..
சாலையோரம் என் இமைகள் சாய்ந்தது
வேடிக்கை பார்த்தபடி இருந்தேன் ....
நீண்ட புடவையுடன் அலங்கரிக்கப்பட்ட தோற்றத்துடன்
பெண்கள் இருவர் சென்றுக்கொண்டிருந்தனர்
ஒரு ஆண்மகனும் அவர்களை பின் தொடர்ந்தபடி சென்றுக்கொண்டிருந்தான்
சற்று நேரத்தில் எதையோ யோசித்து போல அவர்கள் நின்று அவனை திரும்பி பார்க்க
அவனோ எதையும் அறியாதவன் போல நின்று எதையோ செய்துக்கொண்டிருந்தான்
பின் அவர்கள் நடக்க ....அவர்களை தொடர்ந்தபடி இவனும் நடந்தான் ..
யாரோ ஒருவன் தன் பின்னால் வருகிறான் என்று தெரிந்தும்
அவனை அனுமதித்தபடி அவனை திரும்பி பார்த்தபடி கேலி,கிண்டலுடன் செல்ல
பின்னர் அவன் என் பின்னால் வந்தான் என்று அவனையே குறை சொல்கிறார்கள் .
வயதின் வளர்ச்சியில் தான் எத்தனை மாறுதல்கள் ......
மனிதர்களில் தான் எத்தனை விதங்கள்
எல்லா ஆண்களும் பெண்களை குறைசொல்கிறார்கள்
எல்லா பெண்களும் ஆண்களை குறைசொல்கிறார்கள்
ஆனால் அவர்கள் செய்யும் தவறுகள் தான் எல்லாவற்றிற்க்கும் காரணம் என்பதை மறந்து ...........