என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி

ஆடிக்கொன்னு அமாவாசக்கொன்னு
ஆம நட போட்டுக்கொண்டு
அணிபுடிச்சி வந்தாலும்
சளிபுடிக்க வந்த சனியன்னு
சன்னல் கதவும் அடிச்சிக்குமே!

காதல்கொண்ட பாவத்துக்கு
மானங்கெட்டு மதிகெட்டு
கெட்டுவிட்ட பூமி பாத்து
மூச்சுமுட்ட தூசுதட்டி
ஓடிவந்தன் ஓடிவந்தன்

பைங்கிளியோ சிவந்துவிட்டாள்!
காரணமோ நாணமில்லை
திருமேனியெங்கும் காயமடி!
தாரு தந்த தழும்பில் தான்
முத்தமிட வேணுமடி!

பெற்றெடுத்த பிள்ளைகளின்
பசியறுக்க பார்த்தென்னை,
"வேரறுத்து வீசிவிட்டேன்
வந்த வழி ஓடிவிடு"!
சொல்லியதோர் தத்துப்பிள்ளை.

தங்கிடுவன் என்றஞ்சி
சென்றுவிட வகைசெய்த
காவாயில், சொந்த இடம்
நொந்து ஓட கண்டுகொண்டே
கண்டுகொண்டேன் நல்கதியை.

அரவணைக்கும் பிறப்பிடமும்
அணைவருக்கும் அமைந்திடுமோ!
அகதியென அகப்பட்டு,
போய்வாரன், கண்ணுளவன்
கண்ணில்பட்டா சொல்லிவிடு.

எழுதியவர் : இராஜ ராஜன் (30-Aug-14, 8:55 am)
பார்வை : 180

மேலே