கூட்டல் கழித்தல் பெருக்கல் பரிசுக்காக அல்ல போட்டிக் கவிதை

அருகில் அமரும்
வகுப்புத் தோழிகள்
உன் தங்கையைனக்
கூட்டிக் கொள்

அவளின் பாசங்கள்
உன் அக்காள்களின்
அன்பென ஆசையாய்
சேர்த்துக் கொள்

உன்னை கெடுக்க
உலாவும் நண்பர்களின்
உராய்வுகளை உடனே
கழித்துக் கொள்

ஊருக்கு பயனற்று
ஊதாரியாய் சுற்றும்
உதவா நண்ர்களை
உடனே கழித்துக்கொள்

திறம்பட படித்திடு
திறம்பட உழைத்திடு
திறமைகளை வெளிக்கொணர
திட்டங்களை பெருக்கிக்கொள்

வீழ்ந்ததை மறந்து
வெற்றிக்கு புறப்பட
வீர வழிமுறைகளை
மீண்டும் பெருக்கிக்கொள்

கல்விதனை கடவுளாய்
கற்பவர்களை தெய்வமாய்
பெற்றவர்களை மதித்திடவும்
வழிமுறைகள் வகுத்துக்கொள்

நிதானத்தை தியானித்து
நிதர்சனமாய் பயணித்து
நிம்மதி வாழ்வமைய
நெறிமுறைகள் வகுத்துக்கொள்..

எழுதியவர் : பிரியா பாரதி தூத்துக்குட (30-Aug-14, 11:18 am)
பார்வை : 99

மேலே