வரையச் சொன்னார்கள் உன் அழகு எனக்கு மட்டுந்தான்

உன்னை வரையச் சொன்னார்கள்.
உடனே
என்னைத் தேடினேன்.
ஏன் தெரியுமா?
என்னைத் தேடினால்தானே
உன்னை வரைய முடியும்.
உன்னை வரைந்தேன்.
ஓவியமாக அல்ல - கவிதையாக.
கேட்டார்கள். - எங்கே ஓவியம் என்று?
சொன்னேன் - என்னவள்
என்னுள் இருக்கிறாள் ஓவியமாக என்றேன்.
உன் மேனி அழகை வரைந்துக் காட்டு என்றார்கள்.
மறுத்தேன். - ஏன் தெரியுமா - உன்
மேனியழகு எனக்கு மட்டுந்தான்
ஓவியமாக அழியாமல் இருக்கவேண்டும்.
ஓவியத்திற்கு வர்ணம் உண்டு.- ஆனால்
எதுகை மோனைக் கிடையாதே. - நீ
எதுகை என்றால் - நான் மோனை அல்லவா
ஓவியன் ஆனவர்கள் தூரிகையை
ஓரம் கட்டிவிட்டார்கள். - ஆனால்
தூரிகையாய் விளங்குகிற பேனாக்களை
தூற்றாமல் எழுத்துக்களில்
வார்த்தை வர்ணங்களை தீட்டுகிறார்கள்.
நான் தீட்டிய வார்த்தை ஓவியம் நீ அல்லவா.
அதனால் உன்னை கவிதையில்
அழகுபடுத்தி என்னுள் வாசிக்கின்றேன்
நான்
நாள்தோறும் வாசிக்கும் உன்னழகை
வார்த்தை ஓவியமாய் கவிதையில்
வார்த்தெடுத்து வரைந்துக் காட்டினேன்.
உன்னழகு என்றுமே எனக்கு மட்டுந்தான்.
அதனால்தான் - உன்னை வார்த்தையில்
காணட்டுமே என்று வரைந்தேன் வர்ணித்தேன்.
வஞ்சிக் கொடியே - என்
நெஞ்சுக்குள் உந்தன் உயிர்மெய் எழுத்துக்கள்.
நான் மட்டும் காணவே உன் அழகு.
உன்னை வரையச் சொன்னால்
உயிர்மெய் எழுத்துக்களில் உன்னழகை
அவர்கள் காணட்டும்.- இவன் காதலி
எத்தனை அழகு என்று.

எழுதியவர் : சு. சங்கு சுப்ரமணியன். (31-Aug-14, 4:11 pm)
சேர்த்தது : s.sankusubramanian
பார்வை : 83

மேலே