இதயத்தின் ஒருபாதி நீ

என்னைவிட்டு
நீ
எங்கே போகின்றாய்
பெண்ணே...

நீ
இல்லாமல்
இயங்கவில்லை
இதயத்தின்
ஒருபாதி...

காத்திருந்த
காதலுக்கு சொல்லடி
நல்வழி...

உன்காதல்தான்
என் வாழ்வை
செதுக்கும்
உளி...

நீயின்றி
என் வாழ்வில் ஏதடி
ஒளி..

பொறுக்கமூடியவில்லை
இது
காதல் தந்த வலி...

அடிபெண்ணே
என்னைபார்
ஒரு முத்தம்
ஒன்று தா.
உன்னைமட்டும்
நினைத்த இதயம்
அல்லவா..

சிறுகண்ணீர்துளி
என்கண்ணின்
ஓரம்...
காதலித்து
தோல்வியுற்றதால்
நெஞ்சுக்குள்
பாரம்...

கண்ணீரில்
வாழ்வதால்
நாமும் இங்கே
மீன்கள்தான்
நீ
நினைத்தால் நாம்
கடலில் போய்
சேரலாம்
சேரும்முன்
மதம் என்ற வலையில்
நாம் விழுந்தால்
உயிர்பிரிந்தால்
காதல் முறிந்தால்
்ஒன்றையொன்று
மட்டும் நினைவில்
நீ வைத்துகொள்..
்்இங்கில்லையென்றால் சொர்க்கத்தில் நாம்
சேரலாம்
அங்கும் சாதி மதம்
நம்மை பிரித்தால்
சொர்க்கமே
வேண்டாமென்று
நரகத்தில்
வாழலாம்...்

எழுதியவர் : star boys (1-Sep-14, 2:18 pm)
பார்வை : 87

மேலே