என்னவனே புரிந்து கொள்வாயா என் காதலை

என்னவனே...

சில நேரங்களில் உன் காதலை
முழுமையாக தருகிறாய்...

சில நேரங்களில் உன் மௌனத்தை
வலியாக தருகிறாய்...

சில நேரங்களில் உன் கோபத்தை...
வெறுப்பை காதலாக தருகிறாய்...

சில நேரங்களில் என்னையே மறந்து
உன் நினைவுகளை ஆறாத
காயமாக தருகிறாய்...

நீ என்னை மறந்த நிமிடங்களில்
உணர்கிறேன்....

என்னை முழுமையாக
மறந்து விட்டாய் என்று...

அது நிரந்த்தரமும் இல்லை...
என உணர்கிறேன்...


என் வலிகளை என்றாவது
ஓரு நாள் உணர்வாயா ...

என்னை உன் உள்ளம் முழுமையாக
புரிந்த்துக்கொண்டால் நிச்சயம் தரமாட்டாய்
வேறு நினைவுகளை வலியாக எனக்கு..

மரணமே வேண்டுகிறேன் ...
இந்த நிமிடமே என்னை சொந்தமாக்கிக்கொள்....

வலிகளை தாங்கும் சக்தி
என்னிடம் இல்லை...

எழுதியவர் : சகிமுதல்பூ (1-Sep-14, 2:36 pm)
சேர்த்தது : சங்கீதா
பார்வை : 437

மேலே