உயிரானாய்

உன் சுவாசம் தீண்டும் போது மட்டுமே மலர்கிறேன்
நீ என் அருகில் இல்லையெனில் கருகி மண்ணாவேன்

எங்கே இருந்தாய் இத்தனை வருடங்கள்
ஏன் என் மனதை கொள்ளை கொண்டாய் இந்த வருடம்

அன்பான உன் இதயமும் அழகான உன் சிரிப்பும்
என்றும் பொக்கிஷமாய் என்னிடம்

கரம் பற்றினாய் என்னை
கற்று தருகிறாய் வாழ்க்கையை

உன்னுடன் சேர்ந்து உருவாகும் இந்த வாழ்க்கை ஓவியம்
மற்றவர் கண் படாமல் பார்த்துகொள்வேன் என் இதயத்தில்

உயிருக்குள் உருகி உணர்வுகளில் கரைந்து
என் உயிரானாய் - என் உயிர் சுவாசமே

எழுதியவர் : Ranith (1-Sep-14, 4:11 pm)
பார்வை : 93

மேலே