ராஜா-ராணி ஓர் முன்னோட்டம்

Hello friends...
இந்த தளத்தில் எங்களின் முதல் தொடர்கதை இது..ராஜா ராணி..
என்ன தோழரே இததான் தியேட்டர்ல படமாவே பார்த்தாச்சே..அப்புறம் என்ன கதையா வேறயா ஸ்வப்பா...அப்டின்னு நீங்க நினைக்கிறது எனக்கு கேட்குது.கவலைபடாதிங்க..
இந்த கதைக்கு இந்த பெயர் பொருத்தமா இருக்கும் னு நினைச்சிதான் ராஜா ராணி னு வச்சிருக்கோம்.அய்யோ மொக்க போடாதப்பா கதைய சொல்லுனு என்ன திட்டுறிங்கதானே...Just இத teaser மாதிரி வச்சுக்குவோம்..

ராஜா ராணி

இந்தகதைய பொருத்தரைக்கூம் இவர்தான் நம்ம ஹீரோ..இவரு பேரு விஜய் ..அட இளையதளபதி விஜய் இல்லங்க அவர் ரொம்ப பிசி.அவர் கால்சீட் வேற கிடைக்கல.அதனால இந்த கதையில் அவர் இல்லை..அதனால நம்ம ஹீரோ விஜய்குமார் என்கிற விஜய்.
அப்பா அம்மா இல்லை.தளபதி படத்துல எப்படி ரஜினிக்கு ஒரு மம்முட்டி ப்ரெண்டோ அதேமாதிரி நம்மஹீரோக்கும் ஒரு ப்ரெண்ட் அவர்பேரு அர்னால்ட் ..ஒருவழியா ஹீரோ பெயர் சொல்லியாச்சு.நம்ம ஹீரோ இருக்கிறாரே அவரோட கேரக்டர் எப்டினா் வடிவேலு கிரி படத்துல சொல்லுவாறே இவன் ரொம்ப ரொம்ப நல்லவனு
அந்தஅளவுக்கு ரொம்ப நல்லவரு.
படிப்பில் கில்லி.BE படிச்சிட்டு அட நம்ம சென்னையில வேலை பாக்குறாறு..ஒருவழியா ஹீரோவ பத்தி சொல்லியாச்சு.

அடுத்து நம்ம ஹீரோயின் பேரு மீரா..இந்த நிமிசம் வரைக்கும் ஜாலியான சேட்டை பண்ணும் கேரக்டர்.,இவங்க குடும்பத்தோடு இருக்கிறது மும்பைல..
ஓகே ஹீரோ,ஹீரோயின் பற்றி சொல்லியாச்சு.இனிமே இரண்டு பேரோட வாழ்க்கையில என்ன நடக்கப்போகுதுங்குற கதையில் பார்ப்போம்.

இப்ப ரொம்ப சீரியஸ் ஆன விஷயம் சொல்லபோறேன்.அது என்னன்ன கதைய படிச்சிட்டு கதை உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்க கருத்தை பதிவுபண்ணுங்க.அதேமாதிரி கதை பிடிக்கல மொக்கையா இருக்குனு நினைச்சிங்கனா நல்லா இல்லைனு comments பண்ணிட்டு போங்க.Please ...
Ok அடுத்து நாம Meet பண்றது கதைக்குள்ளதான்.,..

ஏய் நில்லுங்க ஒரு all the best சொல்லிட்டூ போங்க.,..

ராஜா-ராணி

Coming soon...

எழுதியவர் : star boys (1-Sep-14, 4:22 pm)
சேர்த்தது : Karthi
பார்வை : 251

மேலே