என்ன தவம் செய்ய
என்ன தவம் செய்ததோ உன் காலணிகள்
மலரைத் தாங்கி நிற்க !
என்ன தவம் செய்ததோ பூக்கள்
உன் குழலில் தினம் பூக்க !
என்ன தவம் செய்ததோ மௌனம்
உன் இதழில் வாழ்ந்திருக்க !
என்ன தவம் செய்ததோ பருக்கள்
உன் கன்னத்தில் குடியேற !
என்ன தவம் செய்ததோ பேனா
உன் பற்கள் பதிந்திட !
என்ன தவம் செய்ததோ புத்தகம்
உன் மார்பில் சாய்ந்திருக்க !
என்ன தவம் செய்ததோ காற்று
உன் சுவாசம் கலந்திருக்க !
என்ன தவம் செய்ததோ புடவை
உன் மேனி படர்ந்திருக்க !
என்ன தவம் செய்ய நான்
உன் காதலனாக அல்ல
கணவனாக கரம் பிடிக்க !