நகம் கடித்து நீ

நகம் கடித்து நீ நடக்கையில்
என் அகம் கிழித்துப் போனது
அது என்ன !
அறியாமல் மனம் அடம் பிடிக்கிறது
அறைந்துவிட்டுப் போ உன்
ஆழப் பார்வையால் !
காரணம் சொல்லாதே
காட்சி தர கால்
கடுக்கிறது எனக்கு !
அலைபாயும் என் மனதை
ஆசுவாசப் படுத்திக்கொள்கிறேன் கொடுத்துவிட்டுப்
போ உன் அலைபேசி எண்ணை !
என்ன இந்த திடீர் எடை குறைவு !
மறந்துவிட்டேன் நீ என்
இதயத்தை எடுத்துச் சென்றதை !
எப்பொழுது வருவாயோ
எதிர் பார்த்துக் காத்திருப்பதே வழக்கமானது
என் வாழ்க்கை முழுவதும் !
இறக்கத்தானே போகிறேன் என்றாவது
இருந்துவிட்டு போகிறேனே
அதுவரை உன் நினைவில் !