கண்ணீர் பாதைகள்-வித்யா

கண்ணீர் பாதைகள்-வித்யா

நேற்று நான் அழுதேன்.....
என் கண்ணீர்
அதன் பாதையை
கண்ணிலே தொடங்கி
கண்ணிலேயே முடித்துக்கொண்டது......!!

கன்னங்கள் இடம்தர
மறுத்திருக்குமோ
என நான் யோசிக்கும் நொடியினில்
சிறு புரிதல் என்னில்......!

ஆம்....
என் கண்களில் தொடங்கிய கண்ணீர்
உன் கண்களில் முடிந்திருக்கிறதென்று ......!!

எழுதியவர் : வித்யா (1-Sep-14, 11:18 pm)
பார்வை : 274

மேலே