தூண்டிலில்சிக்கா துடிக்கும் மீன்கள்

..."" தூண்டிலில்சிக்கா துடிக்கும் மீன்கள் ""...

குஞ்சுமீனோ ஒட்டுமொத்தமாய்
சுரக்களோ தரை தட்டிட மட்டும்
கூட்டம் கூட்டமாய் குதிக்கிறது
கொப்பளிக்கும் அலைகளோடு
அடக்குமுறையின் ஒடுக்குதல்
நசுக்கப்படும் மானிடம் போலே
தன் அலைகளின் ஆதரவோடு
ஒட்டுமொத்தமாய் ஒதுக்கியே
துடிதுடிக்க வைத்தே ரசிக்கிறது
காட்சிகளின்கு பரதவைத்தாலும்
பழகிவிட்ட ரணத்தின் வடுவாய்
உச்சுக்கொட்டிவிட்டே செல்கிறது
எங்கள் வேதனையின் உச்சமிது
நீந்திக்குளித்திட கடலிருந்தும்
கரையோர அகதியாய் வாழ்க்கை,,

என்றும் உங்கள் அபுடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (2-Sep-14, 2:06 am)
பார்வை : 68

மேலே