கவிதையே வாராயோ

பட்டமரமாய் நானிருந்தும்
பாதியிலே தஞ்சமென வந்த அற்புதமே..

உன்னை கொஞ்சி மகிழ எண்ணி தானோ
வஞ்சி எனை அன்று தேடி வந்தாயோ..

நீ நெஞ்சு புகுந்து கொஞ்சுகையில்
இந்த மரமும் குளிர்ந்து தளிர்திடுமே..

நீ விரும்பி குடியிருக்க
என்னில் பலநூறு கிளைகள் இருக்கு..

உயிரசைக்கும் உன்னதமே உன்னை
எழில் ஊட்டி வளர்க்க தினம் பலர் இருக்க..

உன்னை கிறுக்கல் என்போர் கையிறங்கி
மெருகேற்றும் கையை வந்து சேராயோ...

உன்னை பொழுதுபோக்காய் எண்ணுங்கை விடுத்து
பொக்கிஷமாய் பேணும் கையில் வாராயோ..

உன்னை வெறுப்பவரும் கையில் ஏந்தி
ஜொலிக்கும் கோடி நட்சத்திரமென சொல்லட்டுமே..

கல் செதுக்க சிற்பமென்றால்
கல் இல்லாவிடம் சிற்பிக்கென்ன வேலை..

சொல் வடிக்க கவிதை என்றால்
எழுத்தை கிறுக்கல் என்போருக்கு என்ன பெயரோ...

பெயர் உருக்கொடுக்கும் உன் மதிப்பு
அறியா மனம் புகுதல் உனக்கு அவமானம் அல்லோ..

அப்பனாகட்டும் சுப்பனாகட்டும் உன்னை மதியார்
மனம்விடுத்து இன்றே வாராயோ இக்கணமே வாராயோ..

உன்னை ரசித்தே ருசித்திட இந்த தினமும்
கோடி மனம் காத்துகிடக்கு..

வாராயோ வாராயோ வண்ணத்தமிழ் குழைத்து
முப்பாலும் கலந்திடும் பொற்கிண்ணமதில் அமிர்தமாக..!!

எழுதியவர் : லில்லீ (2-Sep-14, 2:20 am)
Tanglish : kavithaiye vaaraayo
பார்வை : 103

மேலே