மழலை கவிதை

பத்து மாசம் சிறையில் வச்சு
என்ன பெத்தா என் ஆத்தா....
பெத்தெடுத்து மாரில் வச்சு சொன்னாலே
என்ன பெத்த ராசா


ஆரவாரம் தங்காமல் பல நூறு முத்தம்
வச்சா...
பட்டு போல என்னை தொட்டு பாத்து பாத்து
சிரிசுகிட்டா

வெளங்கலையே ஏன் எனக்கு வீலென
கத்திபுட்டேன்,
துடியா துடிச்சு போயி தலயோரம் சாச்சு வச்சு
தாலாட்டு பாடிபுட்டா

வெது வெதுப்பா அவ அணைக்க
அவ சூடு மனசுல பதிச்சு வச்சேன்,
அப்பன் வந்தான் மாமன் வந்தான்
அதுகூட அத்த வந்தால்,
செல்லம் தங்கமுன்னு தூக்கி வச்சு கொஞ்சுனாலும்
சூடு கண்டு முழிசுகிட்டேன்
ஆத்தாகிட்ட போகணுமுன்னு சொல்லாம அழுது வச்சேன்.

வய்யாம வசுபுட்டு ஆத்தாமடி என்னை வச்சா,
வாடா ராசவேன்னு என் ஆத்தா சொல்லிக்கிட்டு
அழகழகாய் ரெண்டு கண்ணு அவளோடு சேர்ந்து வர
மூக்கோடு மூக்கு முட்டி உரசாம உரசி போக
முட்டு முடுன்னு மொனகிகிட்டெ என்
நெத்தியில வலிக்காம முட்டு வச்சா

கலைந்த முடியோடு கலங்கி அவ கண்ணிர்விட
அத பாத்த அவ ஆத்தா,
பச்சை உடம்புக்காரி படுத்துகொன்னு அவ சொல்ல
மெல்ல என்னை அணைச்சு,
மாராப்பு சீலய படரவிட்டா என் மேல

தாலாட்டு பாட்டு பாடி தமிழோடு தாய்பால் சேர்த்து
என் உதட்டோடு வச்சு வச்சு உறங்க வச்சா
என் ஆத்தா.

எழுதியவர் : வினோத் (2-Sep-14, 6:12 am)
Tanglish : mazhalai kavithai
பார்வை : 195

மேலே