அம்மா - இராஜ்குமார்

மடியில் ஏந்திய ஏக்கமெல்லாம்
உள்நெஞ்சில் நிஜமாய் நிலைக்குதம்மா .!!
செடியில் பூக்கும் பூக்களெல்லாம்
உன்மணத்தை வாசமாய்வீசி மலருதம்மா ..!!

கடனை வாங்கிய என் கைகளெல்லாம்
தன்ரேகை அழிய உழைக்குதம்மா ..!!
பணத்தை திருப்பி தாரும்தருணமெல்லாம்
வீட்டில் பிரச்சனை நிலைக்குதம்மா ..!!

உறவும் ஒதுக்க எனை வளர்த்ததெல்லாம்
உயிராய் உருகி உலவுதம்மா ..!!
உடைக்க முடியா உன் அன்பெல்லாம்
உணர்வாய் நரம்பில் தெறிக்குதம்மா ..!!

உந்தன் சோகம் சொல்லும் வார்த்தையெல்லாம்
குரலில் மௌனமாய் மாறுதம்மா .!!
உந்தன் வேகம் சொல்லும் செயல்களெல்லாம்
முயற்சியில் வழித்துணையாய் வருகுதம்மா ..!

தந்தை செய்த தீரா கொடுமையெல்லாம்
உள்மனதை உருத்தி வருத்துதம்மா ..!!
தங்கையின் ஆசை சொல்வார்த்தையெல்லாம்
இமையில் எரிந்து இறக்குதம்மா ..!!

வாசலில் விழுந்த உன் கண்ணீரெல்லாம்
என்னிருதயம் வழியே சுரக்குதம்மா ..!
வசையை வீசிய நம் உறவெல்லாம்
ஆசையாய் வந்தினி அணைக்குமம்மா ..!

கனவில் கால் பதித்து உன்மகனும் வாரேன் - அதை
புகழ்ந்து பெற்று உன்மனம் மகிழ்வதை நீயே காணேன் ..!!
விழியில் ஊறி உதிரும் என்விழிநீரை பாரேன் - அதில்
நனைந்து நழுவி என்னிதயம் அழுவது ஏன் கேளேன் ..!!

- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (2-Sep-14, 1:52 pm)
பார்வை : 280

மேலே