வினோத் ராஜாராமன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வினோத் ராஜாராமன்
இடம்:  மும்பை
பிறந்த தேதி :  08-Mar-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Jul-2014
பார்த்தவர்கள்:  108
புள்ளி:  14

என்னைப் பற்றி...

சிறிய வயதில் இருந்து தமிழ் மேலும் தமிழ் படைப்புகள் மேலும் அளவற்ற பற்று கொண்டவன் நான், அடிப்படையில் எழுதலானாக வேண்டும் என்ற என்னுடைய எண்ணம் இது வரை தவழ கூட ஆரம்பிக்கவில்லை...இந்த எழுத்து பக்கம் என்னை எழுத துண்டும் என்பதில் ஐயமில்லை...பார்க்கலாம் படைப்புகளுடன்.

என் படைப்புகள்
வினோத் ராஜாராமன் செய்திகள்
வினோத் ராஜாராமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jan-2015 1:54 am

கனவில் கவிதைகள் பிறக்குது
எழுதையில் வார்த்தைகள் மறக்குது
அவளின் பிம்பங்கள் ஆயிரமாய் தெரியுது
மாற்றங்கள் என்னுள் நிகழ்ந்தது.

அவள் கூந்தலின் நறுமணம் நினைக்கையில்,
கூடலின் வாசனை படருது
எந்தன் முரண்பாடுகள் மூச்சற்று கிடக்குது
நெஞ்சில் சூரியன் தனலென எரியுது

காதல் எத்தனை பலமானது முதல் முறை புரியுது
எந்தன் பலவீனம் அவள் என்று விளங்குது
நீரில்லா மீன் போல நெஞ்சு த்த்தளிக்குது
சப்தம் எல்லாமே அவள் சிரிப்போளியாய் கேட்க்குது

மருதாணி விரல் ஒன்று என் நெற்றியை வருடுது
தூக்கத்தின் ஓரத்தில் சொர்க்கம் ஒன்று விரியுது
இதமான என் கை ரேகைகள் அவள் கன்னத்தில் பதியுது
அவள் சுவாச வெப்பத்தை என் நாசி உண

மேலும்

நல்லாருக்கு தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 13-Jan-2015 9:36 am
வினோத் ராஜாராமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jan-2015 5:18 pm

குளிர்தன்னை குளிர்விக்கும்
குளிரான மார்கழியிலே
சூரியனும் போர்த்திக்கொள்வான்
மேகமெனும் போர்வைதனை.

மண்வாசம் போல
இக்குளிர் காற்றுக்கும் வாசமுண்டு
பூக்களுடன் மழலை பேசி
இயற்கையுடன் கவிபாடி
என் மேனியிடம் வாருதய்யா.

குளிர்காற்று மேனியிலே
மெல்ல மெல்ல படர்கையிலே
கை மயிரெல்லாம் குத்திநின்று
மயில்போல ஆடியது,
கை போர்வைதனை தேடியது.

புதுப்பெண் கவி சொல்லியது,
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்.
என் பாவை அவள் இடம் இருக்க
போர்வையெல்லாம் தேவையில்லை.
அவள் இளஞ்சுட்டு முத்தத்திலே
என் எச்சில் கூட வெந்நீர் ஆச்சு,
குளிரெல்லாம் போயே போச்சு.

மேலும்

நன்று தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 03-Jan-2015 3:05 pm
வினோத் ராஜாராமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Dec-2014 9:00 pm

எ மாமன் கண் விழிச்சி
கண் என தேடயில
கசக்கிய கண்ணோடு கொல்லப்புறம்
வந்து நின்னான்.
கஞ்சி பானையெல்லாம் கழுவி நா கவுக்க
களவாணி பயபோல பின்னால வந்து
நின்னு கட்டி என அணைச்சான்

ஐய போமாமா ஆசய பாரு காலயிலே
வெலயாட்டா சினுங்கி தள்ளிநின்னேன்,
லேசா பிடிச்ச கையி இருக்கி என அணைக்க,
மீச முள் குத்த குத்த கன்னத்துல முத்தம் வச்சான்.

உறவெல்லாம் எதிர்த்து நிக்க காதலிச்சு
கட்டிகிட்டோம்,
ஆறு மாசத்திலயே நூறு வருச நெனப்பிருக்கு,
அவன் கட்டுன வெரும் மஞ்ச கயிறு
வைரம் மாதிரி ஜொலிக்கிது நெஞ்சுக்குள்ள.

குளிச்சு மாமன் வாரயில
கஞ்சி பானை முன்ன வச்சு
நேத்து வச்ச மீன் கொழம்பும் வெங்காயம் ரெண்டும் வச்சு
கு

மேலும்

மிக மிக அருமை 30-Dec-2014 8:39 am
ச்சே சான்சே இல்லை என படித்தவுடன் நான் உதிர்த்த வார்த்தை , வினோத் . மிக நிறைவாய் இருக்கிறது கவிதை தோழா . தட்டச்சு பிழைகள் இருக்கிறது . திருத்தி விடவும் . தொடருங்கள் .. 30-Dec-2014 8:36 am
வினோத் ராஜாராமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Dec-2014 12:24 am

பிறக்கும் பொழுதே இரண்டு தாயுடன் பிறந்த அதிர்ஷ்டசாலி நான்.

ஆம் அக்காளுடன் பிறக்கும் அணைத்து பிள்ளைகளும் இரண்டு தாயுக்கு பிள்ளை ஆகிறார்கள்.

( ஒரு அக்காளின் கவிதையினை தம்பி வந்து எழுதிருக்கேன்)

தாய் வயிறு வீங்கி போயி
அது ஆச்சு பல மாசம்
அவ கன்னத்தில் முத்தம் வைக்க
மறந்தாச்சி பல மாசம்
அவ வயிற்றோடு காது வச்சு
உதைத்தானா பேசறானா அப்ப அப்ப
கேட்டுப்புட்டு,
ஓயாம முத்தம் வைப்பேன்
அவள் வயித்து வழி தம்பி கன்னத்துல.

இரவோடு இரவாக இடுப்பு வலி
கண்ட தாய, ஆஸ்பத்திரி தூக்கி போக
பக்கத்து விட்டு அத்த கையில்
என்னை பாக்க சொல்லி போக
தூக்க கலக்கத்துல அப்படியே தூங்கிப்புட்டேன்.
கண் முழிச்சு பார்க

மேலும்

நன்று வாழ்த்துக்கள் ... 26-Dec-2014 1:53 pm
வினோத் ராஜாராமன் - வினோத் ராஜாராமன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Sep-2014 2:30 am

பேருந்து நிறுத்தத்தில் பலவருடம் உன்னிடம்
என் காதலை வெளிபடுத்த முயற்சிக்கும்போது
வார்த்தைகள் என் உதட்டுக்குள்ளே
சண்டைபோட்டு தொண்டைக்குழியில் கரைந்துபோகும்

நீ என்னை காணாதபோது உன்னையும் உன் கண்ணையும்
பார்த்து பார்த்து பூத்துபோகும் எனது விழிகள்
நான் காணாதபோது எப்போதாவது உன் விழிகள் என்மீது
படுவதை நான் உணரும்போது,
உன் விழிகளோ நான் உன்னை பார்கவில்லை என்று சொல்லுவது போல
பாசாங்குசெய்து உன் உதடுகளிக்கிடையில் மெல்லிய புன்னகை பூ பூற்றுமரையும்.

உன் மௌனம் என்னை கொன்று தீர்த்தபோது
உன் இமைகள் விழிகள் புருவங்கள் எல்லாம்
ஒன்றுக்கொன்று முந்திக்கொண்டு என்னிடம்
அழகிய மொழீனை அறிமுகபடித்தின

மேலும்

உங்களுக்கு என் நன்றிகள், நம் தவறை சுட்டிகாட்டுவது சிறந்த தோழமையின் கடமை, அதற்காக எனது நன்றி. இரவு இரண்டரை மணிக்கு எழுதியபோது இந்த இலக்கண பிழையை உணரவில்லை.இனி வரும் என் படைப்புகளில் சரிபார்த்து அனுப்புவேன். வாழ்க வளமுடன். 20-Sep-2014 1:27 pm
எதார்த்தின் வெளிப்பாடு அருமை. பி.கு. கொஞ்சம் எழுத்துப் பிழைகளைச் சரி செய்து விடுங்கள். "ஓர்" என்பது ஒருமை தானே "ஆண்டுகள்" என்ற பன்மை சரியாகாதே (ஓர் ஆண்டுகளாய் = ஓர் ஆண்டு). நான் சொல்வது சரியா இல்லையெனில் என்னைச் சரி செய்துகொள்வேன். நன்றி. வாழ்க வளமுடன் 06-Sep-2014 12:45 pm
வினோத் ராஜாராமன் - வினோத் ராஜாராமன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Sep-2014 6:12 am

பத்து மாசம் சிறையில் வச்சு
என்ன பெத்தா என் ஆத்தா....
பெத்தெடுத்து மாரில் வச்சு சொன்னாலே
என்ன பெத்த ராசா


ஆரவாரம் தங்காமல் பல நூறு முத்தம்
வச்சா...
பட்டு போல என்னை தொட்டு பாத்து பாத்து
சிரிசுகிட்டா

வெளங்கலையே ஏன் எனக்கு வீலென
கத்திபுட்டேன்,
துடியா துடிச்சு போயி தலயோரம் சாச்சு வச்சு
தாலாட்டு பாடிபுட்டா

வெது வெதுப்பா அவ அணைக்க
அவ சூடு மனசுல பதிச்சு வச்சேன்,
அப்பன் வந்தான் மாமன் வந்தான்
அதுகூட அத்த வந்தால்,
செல்லம் தங்கமுன்னு தூக்கி வச்சு கொஞ்சுனாலும்
சூடு கண்டு முழிசுகிட்டேன்
ஆத்தாகிட்ட போகணுமுன்னு சொல்லாம அழுது வச்சேன்.

வய்யாம வசுபுட்டு ஆத்தாமடி என்னை வச்சா,

மேலும்

தாய் பாசம் ;;;;;;;;;;; சேய் பாசம் ;;;;;;;;;; இல்லாத உணர்வு வெறுமை ;;;;;; 02-Sep-2014 11:50 am
அட அட அழகோ அழகு 02-Sep-2014 10:38 am
நிச்சயமாக தோழரே 02-Sep-2014 9:58 am
கொடுத்த முத்தங்கள் நினைவுக்கு வருகிறது 02-Sep-2014 9:57 am
மேலும்...
கருத்துகள்

மேலே