அவளை பெற்றது வரம்
கனவில் கவிதைகள் பிறக்குது
எழுதையில் வார்த்தைகள் மறக்குது
அவளின் பிம்பங்கள் ஆயிரமாய் தெரியுது
மாற்றங்கள் என்னுள் நிகழ்ந்தது.
அவள் கூந்தலின் நறுமணம் நினைக்கையில்,
கூடலின் வாசனை படருது
எந்தன் முரண்பாடுகள் மூச்சற்று கிடக்குது
நெஞ்சில் சூரியன் தனலென எரியுது
காதல் எத்தனை பலமானது முதல் முறை புரியுது
எந்தன் பலவீனம் அவள் என்று விளங்குது
நீரில்லா மீன் போல நெஞ்சு த்த்தளிக்குது
சப்தம் எல்லாமே அவள் சிரிப்போளியாய் கேட்க்குது
மருதாணி விரல் ஒன்று என் நெற்றியை வருடுது
தூக்கத்தின் ஓரத்தில் சொர்க்கம் ஒன்று விரியுது
இதமான என் கை ரேகைகள் அவள் கன்னத்தில் பதியுது
அவள் சுவாச வெப்பத்தை என் நாசி உணருது
பிரிவொன்று தொடங்கையில் உறவொன்று கேட்க்குது
விதி ஒன்று மாறாதா விழி அவளை ஏங்குது
நேற்று வரை இல்லாத நோய் ஒன்று ஏன் இது
அவள் புருவ இடைதனில் பொட்டு வைக்க தோன்றுது
என் தாயின் பழைய சேலைகள் உனக்கென்று சேருது
என் பரம்பரை வாரிசுகள் உன் போல பேசுது
இன்று என்ன சமைக்க குரல் ஒன்று அடுப்படியில் கேட்க்குது
அது உன் குரல் என்று அடிமனசு சொல்லுது
எனக்கான பிராத்தனைகள் உந்தன் வழி நடக்குது
நிரைத்த என் முடிகளை உன் கை நகம் எண்ணுது
கிழவா போடான்னு ஆசையா கொஞ்சுது
மீச முறுக்கிக்கிட்டு தோல் அவளை இடிக்கிது
அவளுக்கு பிடித்த உணவொன்றை சமைத்து தர தோன்றியது
கத்தி அறுபட்டு என் கை விரல் அவள் நாக்கில் சேருது
செல்லத்திட்டுக்கள் அவள் உதடு உதிர்க்குது
அவள் உதடு அசைகையில் என் இமைகள் மூட மறுக்குது
அவள் விரல் சொடுக்குகள் என் கை எடுக்குது
விடுக்கென்று அவள் விளகயில் ரசிக்க தோன்றுது
என் மடியினில் அவள் உறங்கயில் எத்தனை சுகமிது
அவளை பெற்றது நான் என்றோ செய்த தவம் அது.