கரைக்கொண்டு சேர்த்திருப்பேன் மதனா,,, ம்ம்ம்
கரைக்கொண்டு சேர்த்திருப்பேன் மதனா,,,
======================================
மண் பாதை மீட்டிச்செல்லும்
பாத மோகங்களே
கேளுங்கள்
எப்பொழுதேனும் என் வெம்மை உணர்ந்திருப்பானா என்று
மஞ்சு மூடிய நின் கண்களை
குத்தி உடைக்கலாம்
வா, உன்னை ஆணாக்கித்தருகிறேன்
வா, நாம் இறங்கி இறங்கி போகலாம்
காதிறைக்கும் அலை சப்தங்களைத் தாண்டி
மேலும் ஆழத்தில் போகலாம்
பூமி தூரமாகும்
இன்னும் இன்னும் இறங்கி
ஜலக்கன்னிகளுடைய அரண்மனை போகலாம்
உன்னைத்தவிர
அங்கே ஆண்கள் யாரும் இரார்
காவல் அடக்கம்
பூப்படைந்த கன்னிகைமார்களே இருப்பார்கள்
அவர்கள் உன்னை
வழுதிய செதில் சாமரங்களால் வரவேற்பார்கள்
அவர்களுடைய சூடுதட்டி
உன் விழிப்படர்ந்த மஞ்சு உருகி உருகிப் போகட்டும்
அங்ஙனம் நீ ஆணாகலாம் வா
கணக்கில்லா ஆழம்
நிமிர்ந்த என் பின் பிரதேசம்
வேறென்ன வேண்டும்,,,
சந்தேகமா ??
கடப்பது கடலிலா
என் புறமுதுகிலா என்று சந்தேகமா ??
என் புறமுதுகு பிரவேசித்து
மார்பில் வெளிப்படு
மறந்தும் என் மார்புப்பள்ளம் விழுந்திடவேண்டாம்
உன் மார்பு முடிக் குன்றுகளுக்குள்
கடலுப்பேருகிற இடைவெளியை அனுமதியேன்,,!!!
பிணக்காட்டின் வாதலிலாய் இருக்கலாம்
என் ஊடான உன் போக்கு
துணிச்சல்கள்
ஆழிக்கடலினும் பேராழத்திற்கானது
சித்தமும் உறுப்புகளும் செயலிழக்கக்கூடும்
வாழ்க்கை அசத்தியத்திற்கும்
ஆத்ம நாசத்திற்கும்
அவற்றின் இடை இருக்கும் காரணங்களுக்கு
நான் துணைப் போகின்றவளாகக்கூட
என்னை நீ நினைக்கலாம்,,
ஜீவன் விடைப்பெற்று
போதம் பெற்றப்பின்னால்
கடலில் இருந்து சிறகு வைத்து
மேலே பொங்கி எழும்
தேவதையாகிய நான்,,
என் பிரிய புருஷன் உன்னையும்
முக்கிக் கொன்றிருப்பேன்
கீழ்வானில்
ஆதவன் மறைந்ததுபோல்
மூழ்கிப்போன நம் சடலங்களை
உயர உயரப்பறந்து
கரைசேர்த்திருப்பேன்,,,
கரைசேர்த்திருப்பேன்,,
இதோ இங்கே புத்தகங்களாக்கி வைத்திருக்கும்
நம்மிக்கதையை
குழிதோண்டிப்பார்க்கின்றவர்களுக்கு
இதுவே இப்பிரபஞ்சத்தின்
தாய்க்காதலென தோன்றிவிடட்டுமே
ஏன் என்றால்
நம் கதை கேட்காதவர்கள் யாரும்
கதையற்றவர்களாகி விடுவார்கள் ஆதலால்
அனுசரன்