இப்படி நாம் காதலிப்போம் - பொங்கல் கவிதை போட்டி 2015

கண்ணில் தொடங்கும் காதலை
கடிதத்தில் தவழவிடுவோம்..
குறுந்தகவல் அனுப்பி
கொலை செய்ய வேண்டாம்...

காதலில் முத்தம் அவசியம்
முத்தத்தில் திளைக்கும் காதல் - அனாவசியம்

இன்று..
காதல் சொல்வதும்...
ஏற்பதும்... எளிது
ஏகமனதாய் சுமப்பது.....அரிது

மதம்
மொழி
இனம்
இவற்றின்பால் காதல் பிரிவது விதி ...

காதலிப்பவரே பிரிந்தால் காதலின் கதி..?

வயதின் வேகத்தில்
வழிமாறி காதலை வரையறுக்க வேண்டாம்.
மனதார காதலித்து மாங்கல்யம் காண்போம்
மண்ணுக்குள் மரிக்கும் வரை ஒன்றாக இருப்போம்...

மொத்தத்தில்...
காதலை காயப்படுத்தாமல் காதலிப்போம்
இப்படியாய்...

--ஆர்.வீரபாகு
-------------------------------------------------------------------------------------------
இந்தக் கவிதை என்னால் எழுதப் பட்டது என உறுதி அளிக்கின்றேன்.

14 பி வாடித்தெரு,
தூத்துக்குடி - 628001
தமிழ் நாடு
இந்தியா
கை பேசி : 99446 92960

எழுதியவர் : ஆர்.வீரபாகு (13-Jan-15, 6:53 am)
பார்வை : 86

மேலே