காலை குளிர்

குளிர்தன்னை குளிர்விக்கும்
குளிரான மார்கழியிலே
சூரியனும் போர்த்திக்கொள்வான்
மேகமெனும் போர்வைதனை.

மண்வாசம் போல
இக்குளிர் காற்றுக்கும் வாசமுண்டு
பூக்களுடன் மழலை பேசி
இயற்கையுடன் கவிபாடி
என் மேனியிடம் வாருதய்யா.

குளிர்காற்று மேனியிலே
மெல்ல மெல்ல படர்கையிலே
கை மயிரெல்லாம் குத்திநின்று
மயில்போல ஆடியது,
கை போர்வைதனை தேடியது.

புதுப்பெண் கவி சொல்லியது,
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்.
என் பாவை அவள் இடம் இருக்க
போர்வையெல்லாம் தேவையில்லை.
அவள் இளஞ்சுட்டு முத்தத்திலே
என் எச்சில் கூட வெந்நீர் ஆச்சு,
குளிரெல்லாம் போயே போச்சு.

எழுதியவர் : வினோத் (2-Jan-15, 5:18 pm)
Tanglish : kaalai kulir
பார்வை : 412

மேலே