எரியாத விருட்சம்
கொடும் பாவிகள்
கூற்றை எண்ணி குலைந்திடாதே!
அவர்
கொடும்பாவி எரிப்பேன் நான்
இடையில் வந்தால்!
...
வரப்போகும் மழை நாளுக்கென
உணவை சேர்க்கும் எரும்பல்ல நான்..
உன் நினைவுகளை மட்டும் சேர்த்து வைத்து
நீ இல்லாத நாளில் அசை போட!
....
இடியாக ..
உன் காதல்
என் மீது இறங்கினால் போதும்..
கருகி ..
எரிந்து போகாத..
விந்தையான விருட்சம் நான்!