விடை கேட்கும் மடல்கள்

பேருந்து நிறுத்தத்தில் பலவருடம் உன்னிடம்
என் காதலை வெளிபடுத்த முயற்சிக்கும்போது
வார்த்தைகள் என் உதட்டுக்குள்ளே
சண்டைபோட்டு தொண்டைக்குழியில் கரைந்துபோகும்

நீ என்னை காணாதபோது உன்னையும் உன் கண்ணையும்
பார்த்து பார்த்து பூத்துபோகும் எனது விழிகள்
நான் காணாதபோது எப்போதாவது உன் விழிகள் என்மீது
படுவதை நான் உணரும்போது,
உன் விழிகளோ நான் உன்னை பார்கவில்லை என்று சொல்லுவது போல
பாசாங்குசெய்து உன் உதடுகளிக்கிடையில் மெல்லிய புன்னகை பூ பூற்றுமரையும்.

உன் மௌனம் என்னை கொன்று தீர்த்தபோது
உன் இமைகள் விழிகள் புருவங்கள் எல்லாம்
ஒன்றுக்கொன்று முந்திக்கொண்டு என்னிடம்
அழகிய மொழீனை அறிமுகபடித்தின
காதல் மொழியோ உன் காந்தவிழின் மொழியோ அவை
மெல்ல மெல்ல என் விழிகளும் புலமை கொண்டன அந்த மௌன மொழியில்
உன் புருவங்கள் எனக்களிக்கும் ஆயிரம் மௌன கவிகளை தினம் தினம்.

நான் உன் பிதனனது முத்திபோக நீ நமது மௌன மொழிகளுக்கு தற்காலிக
முற்றுப்புள்ளி வைத்து உன் அன்னையை என் அத்தையாக ஒப்புகொண்டாய்

உன் கூந்தல் வாசத்துடன் என் காலை துவங்கியது
பூக்களின் மீது பனித்துளி போல நீ நீராடி வரும்போது
உன் கழுத்தருகே பூத்திருந்தன தண்ணீர் முத்க்க்கள்

முடிவிழந்த உன் ஈரக்கூந்தல் நீ துவட்டயில்
மழையின் சாரக்குழந்தை என்முகம் படரும்
முழிதேழுந்த நான் தினம் தினம் தூங்குவது போல நடிக்க தயருகுவேன்
நீ அருகில் வந்து என்னை எழுப்பிட அறியாமல் உன்னை அணைத்திட

இரவில் நான் வரும் வரை விழித்திட முனைந்து
உன்னையறியாமல் உறங்கிடும் உன்விழிகள்

இவை அனைத்தும் நினைத்து காதலியாய் மனைவியை
உன்னை பெற்றதின் பெருமை தலைகேறி என்னருகில்
உறங்கிகொண்டிருக்கும் உன் உதடுகளில் முத்தமிட்டேன்
அந்த முத்தத்தில் ஈரமில்லை உணர்சிகலில்லை
அருகில் உள்ள தலையணைக்கு முத்தமிட்டபோது

ஓர் ஆண்டுகளாய் உன்னை பிரிந்திருக்கும் ஒவ்வொரு
பகலும் இரவும் நொடிகளும் உன்னையும் நம் காதலையும்
நினைவூட்டியது

அப்படி என் நினைவுகளும் அன்பும் புரியாதலால் இன்று
என் கைகளில் நீ கேட்டு அனுப்பிய விவாகரத்து கடிதம்
உன் கையொப்பத்துடன்.

எழுதியவர் : வினோத் (4-Sep-14, 2:30 am)
பார்வை : 373

மேலே