அன்புள்ள நியந்தாவுக்கு 6 இரவுகள் ஜாக்கிரதை

போனை எடுக்க முயற்சித்த சிந்தாவை... சட்டென கட் ஆன கால் திரும்பவும் என்னைப் பார்க்க வைத்தது.....

நானும் சிந்தாவைப் பார்த்துக் கொண்டே இருக்கையில் என் செல் அலறியது....

அன்னிச்சை செயலாய் சுற்றம் மறந்து, பட்டென எடுத்தேன்....

என்ன... பேர்... என்ன.... ஓ..... காஞ்சனமாலாவா....

ம்ம்ம்......

நீ முதல் மாரி இல்ல....நீயும் எல்லார் மாதிரிதான்.....

மற்றவங்களாவது ஒரு முகமூடி போட்ருக்காங்க......நீ.... பத்து போட்ருக்க...

ஹலோ.... இங்க என்ன பிரச்சினை போயிட்டிருக்குன்னு தெரியுமா...

என்ன எவ வீட்லயாது இருப்ப....தெரியாது....

ஆமா... ஆனா நீ நினைக்கற மாரி இல்ல...

ஆமா.. நான் நினைக்கறதெல்லாம் உனக்கு தெரியும் போல.. எங்க சொல்லு... இப்ப நான் எதை நினைச்சிட்டு இருக்கேன்னு....

ஹெலோ......

முதல்ல ஹெலோங்கரத நிறுத்துங்கடா... எவன் பொண்டாட்டி பேரையோ காலங்காலமா இவனுங்க கூப்டுட்டு திரியறானுங்க....

ஆமா.... நீ யாரு....எதுக்கு தேவை இல்லாம

அடி செருப்பால..... காஞ்சனமாலா காஞ்சனமாலானு உருகுன.... இபோ தெரியலையோ....

ஓ....மீனலோச்சனியா......

அடிங்........... நானும் பாத்துடே இருக்கேன்..... ஊர்ல இருக்கரவ பேரையெல்லாம் ... சொல்லிக்கிட்டு .....

என்றபடியே.. நான் சற்றும் எதிர் பாராத கணத்தில் படீர் படீர் என்று என் இரு கன்னங்களிலும் மாறி மாறி அறைந்தது சிந்தா.... என் செல் போன் பல் போய் சோபாவின் அடியில் கரப்பான் பூச்சியாக காலை விரித்துக் கொண்டு கிடந்தது......

நான் சின்ன வயதில் கட்டிக் கொண்டிருந்த கற்பனை காட்சி சரிதான் போல.. எல்லா போலிசுகளின் உடம்பும் கரப்பான் பூச்சியால் ஆக்கப் பட்டது என்றே நம்பிக் கொண்டிருந்தேன்.... சரிதான்..... என் உடல் நடுங்கியது மீண்டும்.... சிந்தாவின் கண்கள் சிவந்திருந்தது.....

மனதுக்குள் எண்ணிக் கொண்டேன் .... இந்த பக்கம் 4 அரை இந்த பக்கம் 5 அரை.... என் முகம் மெல்ல வீங்கத் தொடங்கியது...... அழுகையாக வந்தது.... நியந்தா உன்ன பாக்காமலே செத்துப் போய்டுவேனோ......... வந்தாய்..... அமர்ந்தாய்..... பறந்தாய்..... வேடனை ரசிகனாக்கிய நீ எந்த நாட்டுப் பறவை......
மனம் சொல்லிக் கொண்ட கவிதையில் இலைகளற்ற கோட்டோவிய சித்திரமாய் ஒரு பாலைவன மொட்டை மரம் மூச்சற்றுக் கிடப்பதாக ஆழ்மனதில் ஒரு வேர் தன்னை அறுத்துக் கொண்டே இருந்தது...........

புடவையற்ற சிந்தா..... தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்த பாடலுக்கு தக்கவாறு புன்னைகைத்துக் கொண்டே ஆடத் தொடங்கியது....

தேன் கிண்ணம் தேன் கிண்ணம்
பருவத்தின் பெண் ஒரு
பால் அன்னம் பால் அன்னம்
பழகும் விதத்தில் பால் அன்னம்

உலக வாழ்வை இன்பமாக்க
வந்தவள் பெண்தானே...
உண்மை அன்பால்
உறவை வளர்த்து தந்தவள் பெண்தானே.
குலப் பெருமையைக் காப்பவள் பெண்தானே...
அந்த பெண்ணே உலகின் கண்தானே...

எனக்கு டிவியைப் பார்ப்பதா.... சிந்தாவைப் பார்ப்பதா.... என்றொரு குழப்பம்.... விஜயலலிதாவை ரசிக்காதவர்கள் இருக்க முடியுமா.... சிந்தாதாவை ரசிக்காமல் இருக்க முடியுமா....?

நல்லாதான் இருக்கு.... ஆனா அப்பப்போ அடி வெளுக்குதே.... ஏன்... ?-மனதுக்குள் அதே எறும்பு மெல்ல ஊரத் தொடங்கியது... சிந்தாவின் பார்வையில் கற்கண்டுகள் ஊரத் தொடங்கியது.....இதழ் இன்னும் கனக்கத் தொடங்கியதாக எறும்பின் கற்பனைகள் விரியத் தொடங்கின...சிந்தாவின் ஆட்டம்... மேடு பள்ள கண்களில் டயர் வண்டி ஓட்டியது....

சிந்தாவின் நாக்கில் வெற்றிலை எச்சில் நிறம்...கண்களில் மையின் ஊற்று... கன்னத்தில் மின்னும் பின்னிரவு..... காதுகளில் தொட்டாடும் சில நரைத்த முடிகள்.....கழுத்து வரைக்கும் வந்த கண்களுக்கு வேகத்தடை..... சட்டென்று....................................................

எங்கள் அறை அப்படியே பிரீஸ் ஆக..... காதுக்குள் மட்டும்.. எதோ குரல்கள்..........................


கவிஜி

*நியந்தாவின் வேட்டை ஆரம்பம்.....

எழுதியவர் : கவிஜி (3-Sep-14, 8:53 pm)
பார்வை : 141

மேலே