பாட்டி வைத்தியம்

பச்சக்கீரை தின்னா
பளிச்சுன்னு தெரியும் கண்ணு !!!
வேணான்னு நான் சொன்னா
சொல்லி ஊட்டுவாளே!!!

வயிறு வலிக்குதுன்னு
சொல்லி அழும் போது
சீரகம் நாலெடுத்து-அத
வடசட்டீல வறுத்தெடுத்து
ஒரு சொம்பு தண்ணிய
ஒரு குவளயாச் சுண்ட வச்சு
ஊத்திக் குடிக்கச் சொல்லி
உக்காந்து பார்ப்பாளே!!!
கசக்குதுன்னு நான் சொன்னா
கசப்புதான் வலி போக்கும்
குடிச்சுட்டு கண்ணுறங்கு
என் கன்னுக்குட்டீன்னு சொல்லுவாளே!!!

புதுத்துணிமணி நான் போட்டு
வெளியெங்கும் போய் வந்தா
முச்சந்தி மண்ணெடுத்து,
கடுகு,கருவேப்பிலை,மிளகு சேத்து
மூனு சுத்து சுத்தி
அடுப்பில போடரப்ப
அவ சொல்லும் ஒரு வாக்கு

'' என் ராசாமேல பட்ட எல்லா கண்ணும்
அழிஞ்சுபோக என் மகமாயீன்னு சொல்லிடுவா''

இதயெல்லாம் நினைக்கரப்ப
என் மக்களுக்கு சொல்லித்தர
நீ இல்லாம போயிட்டியே!!!
அலோபதி தின்னு தின்னு
எங்க ஆயுசும் கொறஞ்சுடுச்சே????!!!!!

எழுதியவர் : (3-Sep-14, 12:55 am)
பார்வை : 332

மேலே