யின் யாங்

வேண்டுவன அளவுக்கதிகமாக வேண்டாம்
பேசுவன கடுஞ்சொல்லாயின் வேண்டவே வேண்டாம்
தேடுவன தீயவயாயின் வேண்டாம்
கொடுப்பன பயனற்றவையாயின் வேண்டவே வேண்டாம்
மீறுவன நன்மைபயக்குமாயின் ஆகட்டும்
சீறுவன நன்வழி படுத்துமாயின் அடிக்கடி ஆகட்டும்
போர்முனையும் தர்மம் நிலைநாட்ட ஆகட்டும்
சூட்சுமமும் பிறரை வாழ்விக்குமாயின் அடிக்கடி ஆகட்டும்

எழுதியவர் : கார்முகில் (3-Sep-14, 7:20 pm)
பார்வை : 128

மேலே