மனசுக்குள் கவிதைகள் மலருதடி
உன் நினைவில் நானும்
உறைகின்ற போது...
என் பெயரைக் கூட
மறக்கின்ற போது...
உன் விழியை நானும்
பார்க்கின்ற போது...
என்னை நான் உனக்குள்
தேடிடும் போது...
உனைக் கண்டு நானும்
சிரிக்கின்ற போது...
இதயத்தில் மலர்கள்
பூக்கின்ற போது...
நிலம் பார்க்கும் உன்முகம்
சிவக்கின்ற போது...
உனைப் பார்க்கும் என்முகம்
சிலிர்க்கின்ற போது...
மனசுக்குள் கவிதைகள் மலருதடி...
மல்லிகைப்பூ வாசமது வீசுதடி...
மெல்ல உனை அணைத்திடத் துடிக்குதடி...
மனமெல்லாம் சூடேறித் தவிக்குதடி!