சிரித்து வாழ்ந்திடுங்கள் என்றும்

சிரித்து வாழ்ந்திடுங்கள் என்றும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதிர்கள்
நீங்கள் சிரிக்க மறந்தாலும்
பிறரை சிரிக்க வைக்க
மறந்திட வேண்டாம் என்றும்
உள்ளத்தன்போடு சிரித்திடுங்கள்
உதட்டளவு சிரிப்பு உங்கள்
வேசத்தை காட்டிடும் கண்ணாடி
போன்றது பாரட்ட சிரித்திடுங்கள்
பரிகசிக்க சிரிக்க வேண்டாம்
பலவித சிரிப்புக்கள் உண்டு
இடமறிந்து சிரிக்க வேண்டும்
எல்லா இடத்திலும் சிரித்தால்
மாற்று பெயர் சூட்டி மற்றவர்கள்
சிரித்திடுவர் கருத்தாக சிரித்து
காரியங்கள் வெல்ல முயலுங்கள்
காரணமின்றி சிரித்து கவலையை
தேடிக்கொள்ளாதீர்கள் என்றும்
புன்னகை தவழும் முகத்துடன்
இன்முகம் காட்டி இனிதே
வாழக் கற்றுக் கொள்ளுங்கள்

எழுதியவர் : உமா (3-Sep-14, 4:58 pm)
சேர்த்தது : umauma
பார்வை : 56

மேலே