காதலனை ஒரு சமையற் கூடமாகக் கற்பனை
செலிமா ஹில் என்ற பிரபலமான பிரிட்டிஷ் பெண் கவிஞர் வெளியிட்ட
Portrait of my Lover as a Horse என்ற புத்தகத்தில் காதலனை நூறு விதமான
பொருட்களுடன் ஒப்பிட்டு சிறு சிறு கவிதைகளாக இயற்றியிருக்கிறார்.
அவற்றுள் ஒன்று:
ஓ நாயகனே!
சமையலறையும் பொருட்கிடங்கும்
ஒருங்கமைந்த சிறு கூடத்தை
மணந்து கொள்ள நான் விரும்புகிறேன்!
அதன் அதிகமாகச் சொல்லப்பட்ட
தவறான வழிகாட்டும் வெளிச்சம்
அதைப் பராமரிப்பதை எளிது
என்ற மாயையை உருவாக்குகிறது!
குறிப்பு:
kitchenette : சிறு சமையலறை , சமையலறையும்
பொருட்கிடங்கும் ஒருங்கமைந்த சிறு கூடம்
radiance - the quality of being bright and sending out rays of light
belie - represent falsely