ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

சிற்பமாய் என்னை செதுக்கிய உளிகளே
அன்று உங்கள் அடியின் வலிகள் - இன்று
இன்ப அதிர்வுகள் - கவின் மிகு சிற்பமாய்
வடித்த சிற்ப்பிகளே இந்த சிலையின்
இதயம் நிறைந்த வணக்கங்கள் ....!

அய்யா என்னருமை தமிழ் அய்யா
தொல்காப்பியத்தையும் நன்னூலையும்
வரி விடாமல் நீர் சொல்லிகொடுத்தால்
தமிழ் என்ற வாசனை என்னில் வந்தது

பாரதியையும் பாரதி தாசனையும்
உணர்ச்சியோடு சொன்னதால் -இன்று
தமிழ் உணர்ச்சி என்னில் பெருகியது
நீல வான் ஆடைக்குள் நிலா ...............
என்று பாரதி தாசனின் வரிகளை கண் மூடி
சொல்லும் பொழுது இன்றும் என்னில்
இமயமாய் உயர்ந்து வளர்கிறீர்கள் ......!

பத்துப் பாட்டையும் எட்டுக் கணக்கையும்
பதினென் கீழ்க் கணக்கையும் படித்துப்
படித்து சொன்னதால் இன்று நான்
படிப் படியாய் உயர்ந்தேன் -தமிழ்த்
தேனை படிப் படியாய் பருகினேன் ...!

சமுதாய சிற்ப்பிகளே ......!
வளரும் பாரதத்தின் தூண்களே ........!
ஒட்டு மொத்த மாணவ சமுதாயத்தின்
சார்பாக எட்டி நின்று தண்டனிட்டு
வணங்குகிறேன் ....................................!
மாணவ சமுதாயத்தை வாழ்த்துங்களேன் ...!

எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (5-Sep-14, 9:15 am)
பார்வை : 484

மேலே