என் உள்ளம் அச்சப்படுகிறது

என் உள்ளம் அச்சப்படுகிறது ...!!!

என்னவனின் பார்வை ....!!!
உள்ளம் முழுதும் இன்பம் ...
ஊற்றெடுப்பதாய் இன்புற்றேன் ..
அவரின் பார்வையால் இன்பம்
காணாத பொழுதே இல்லை ...!!!

பிரியப்போகிறார் ....
என்கிறாரே - இப்போதான்
அவர் பார்த்த பார்வை
கொடுமையை ஏற்படுத்துகிறது ..
எப்படி தாங்குவேன் என்று
என் உள்ளம் அச்சப்படுகிறது ...!!!

திருக்குறள் : 1152
+
பிரிவாற்றாமை
+
இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 72

எழுதியவர் : கே இனியவன் (5-Sep-14, 9:05 am)
பார்வை : 117

மேலே